![The hero of 'Gentleman 2'? - producer KT Kunjumon announced](http://image.nakkheeran.in/cdn/farfuture/xagUyWj-ojMe3_Db7pOzDFUNePKrxmVzmiGg4PCgZpo/1664967385/sites/default/files/inline-images/429_2.jpg)
1993-ஆம் ஆண்டு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ’ஜென்டில்மேன்'. இப்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் பிரமாண்டமாகத் தயாராகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் 'ஜென்டில்மேன் ஃபிலிம் இன்டர்நேஷனல்' சார்பாக இப்படத்தைத் தயாரிக்கிறார். கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் நயன்தாரா சக்ரவர்த்தி கதாநாயகியாக நடிக்க கீரவாணி இசையமைக்கிறார்.
இந்நிலையில் ’ஜென்டில்மேன் 2' படத்தின் கதாநாயகன் பற்றிய அறிவிப்பை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தெலுங்கு நடிகர் சேத்தன் சீனு இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். தெலுங்கில் சில படங்களில் நடித்த சேத்தன் சீனு ’ஜென்டில்மேன் 2' படத்தின் மூலம் ஹீரோவாக தமிழுக்கு அறிமுகமாகிறார்.