தன்னுடைய அனுமதி பெறாமல் புகைப்படம், வசனத்தை சிக்ஸர் படத்தில் பயன்படுத்தியதாக கவுண்டமணி குற்றச்சாட்டு. சிக்ஸர் படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் நடிகர் கவுண்டமணி.
![goundamani](http://image.nakkheeran.in/cdn/farfuture/uVk6Bn4P1XdN1A5_gsypZx0t-gqQ9dGaPBubzyt2S4A/1567079723/sites/default/files/inline-images/goundamani.jpg)
வால்மேட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் சிக்ஸர். வைபவ் கதாநாயகனாக நடிக்க புதுமுக இயக்குனர் சாக்ஷி இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் வைபவ் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவராக நடித்துள்ளார். ராதாரவி, இளவரசு, சதீஷ், ராமர் ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
![sixer](http://image.nakkheeran.in/cdn/farfuture/OYgRfvRa2ZfPSkzasVbYKOuiW_S9EP17Q8ErrXGIQbE/1567079749/sites/default/files/inline-images/336x150%20sixer%20ad_16.jpg)
இந்தப் படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், தன்னுடைய அனுமதி பெறாமல் புகைப்படத்தையும் வசனங்களையும் தவறான முறையில் பயன்படுத்தியதாக கூறி சிக்ஸர் படத்தின் தயாரிப்பாளர்கள், தினேஷ் மற்றும் ஸ்ரீதர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கவுண்டமணியின் வழக்கறிஞர் சசிகுமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.