‘பழைய வண்ணாரப்பேட்டை’ படத்தை தொடர்ந்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘திரௌபதி’. இதில் ஷாலினியின் அண்ணன் ரிச்சர்ட் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியானபோது பல சர்ச்சைகளை கிளப்பியது. தற்போது படம் ரிலீஸாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படம் வெளியாகுவதற்கு முன்பு படம் குறித்து இப்படத்தின் ஹீரோ ரிச்சர்ட் நமக்கு பேட்டி கொடுத்தார். அதில் நம் கேள்விக்கு அவரளித்த சில பதில்களின் தொகுப்பு இதோ...
![richard](http://image.nakkheeran.in/cdn/farfuture/MY1kM5ym81ErHmEXGH7D6Avz1NodVjO64bC_NK3W6AM/1582957056/sites/default/files/inline-images/richard.jpg)
‘திரௌபதி’ போஸ்டராக இருக்கட்டும், ட்ரைலராக இருக்கட்டும், அதை பார்த்தவர்களெல்லாம் இது ஒரு சாதிப்படம்பா என்று அடையாளப்படுத்துகிறார்கள். அப்படி அடையாளப்படுவதற்கு உங்களுடைய பதில் என்ன?
அப்படியெல்லாம் இல்லை. அந்த கண்ணோட்டத்தில் பார்த்தீர்கள் என்றால் அப்படிதான் தெரியும். ட்ரைலர் பார்க்கும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள். அவர்களுக்கு சாதகமாக யோசித்திருப்பார்கள். இந்த கதையை இயக்குனர் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்துதான் எழுதியிருக்கிறார். அதில் சிலவற்றை எதர்ச்சியாக நடந்திருக்கலாம், ஆனால் இந்த கதையை இயக்குனர் மூன்று வருடங்களுக்கு முன்பு எழுதியிருந்தார். சில நேரங்களில் சில குறிப்பிட்ட விஷயங்கள் ஒன்றாக அமைகிறது. உங்களுக்கு தெளிவாக புரிய வேண்டும் என்றால் படத்தை பாருங்கள்.
உங்க படத்தை பார்த்து ஷாலினி, அஜித் எதாவது இன்புட்ஸ் சொல்லுவாங்கலா?
அவங்களும் எதுவும் சொல்றது இல்லை, நானும் எதுவும் அவங்களுக்கு சொல்றதில்லை. படத்தை ஜாலியாக பார்ப்போம் அவ்வளவுதான்.