Skip to main content

தோனி தயாரிக்கும் தமிழ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Published on 10/04/2023 | Edited on 10/04/2023

 

dhoni entertainment in Lets Get Married first look postar released

 

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற தோனி ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாடி வருகிறார். இதனிடையே விவசாயம் செய்வதிலும் விளம்பரங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். 

 

மேலும் 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் 'ரோர் ஆஃப் லயன்' என்ற ஆவணத்தொடரை தயாரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 2011ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதை அடிப்படையாகக் கொண்டு 'ப்ளேஸ் டு க்ளோரி' (Blaze to Glory) என்ற ஆவணப்படம் உள்ளிட்ட சில படைப்புகளைத் தயாரித்துள்ளது.  

 

'தோனி எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் முதல் தமிழ் படமாக 'லெட்ஸ் கெட் மேரீட்' (Lets Get Married) என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் நதியா மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். 

 

இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, காமெடி கலந்த குடும்ப படமாக இப்படம் அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது. இப்போஸ்டர் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்