வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான அசுரன் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து கௌதம் இயக்கத்தில் தனுஷ் நடித்து பல வருடங்களாக வெளியாகாமல் இருந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படமும் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் பட்டாஸ் என்றொரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் டி40 என்று சொல்லப்படும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் லண்டனில் நடைபெற்று முடிந்த நிலையில் திடீரென இரண்டாம் கட்ட ஷூட்டிங் மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்காக இதற்கு முன்பு வேறு தோற்றத்தில் இருந்த தனுஷ், மதுரையில் நடைபெறும் ஷூட்டிங்கில் பேட்ட வேலன் கெட்டப்பில் பெரிய மீசை வைத்துகொண்டு நடித்து வருகிறார். இந்த லுக் அனைத்தும் லீக்காகியுள்ளது. மேலும் ஷூட்டிங் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில் கோவில் விசேஷத்தில் டான்ஸ் ஆடிக்கொண்டே செல்வதுபோல இருக்கிறார்.

‘டி40’ என அழைக்கப்படும் இந்த படத்தின் உண்மையான தலைப்பு ‘சுருளி’ என்று சொல்லப்படுகிறது. மேலும் தனுஷ் இரண்டாவதாக இயக்கும் படத்தின் முதல் பாதி ஷூட்டிங் எப்போதோ முடிந்துவிட்டது என்றும், இரண்டாம் பாதி ஷூட்டிங் மீதம் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.