Skip to main content

வெளியானது தர்பார் செகண்ட் லுக்... இந்தியளவில் முதலிடம்...

Published on 11/09/2019 | Edited on 11/09/2019

ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் 'தர்பார்' படத்தின் 3ஆம் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினி என்கவுண்டர் சிறப்பு போலீசாகவும், தாதாவாகவும் இரட்டை வேடத்தில் நடிப்பதாக சமீபத்தில் தகவல் கசிந்தது. 
 

darbar


 


இதில் ரஜினிக்கு மகளாக நிவேதா தமஸ் நடிக்கிறார். சந்திரமுகி, குசேலன் படத்தை அடுத்து ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தின் தொடக்கத்திலேயே தர்பார் என்ற தலைப்புடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துதான் ஷூட்டிங்கை தொடங்கியது படக்குழு.

இதனை அடுத்து ஷூட்டிங்கில் இருந்து ரஜினியின் பல புகைப்படங்கள் கசிந்துகொண்டே இருந்தது. இதனால் படக்குழு இரண்டு நல்ல புகைப்படங்களை வெளியிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை உருவாக்குங்கள் என்று ரசிகர்களுக்கு அறிவுருத்தியது.

இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தர்பார் படத்தின் செகண்ட் லுக்கை வெளியிட இருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று மாலை ஆறு மணிக்கு போஸ்டரை வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. 

சார்ந்த செய்திகள்