Published on 09/10/2019 | Edited on 09/10/2019
தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவான அசுரன் படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தனுஷ் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து வருகிறார்.
![danush](http://image.nakkheeran.in/cdn/farfuture/A9VJ5JMRJqWkhzn6g8FyN8smXO-LLqoeTcWxrm7n_uY/1570604351/sites/default/files/inline-images/370A7183.jpg)
கேங்ஸ்டர் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் லண்டனில் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
![miga miga avasaram](http://image.nakkheeran.in/cdn/farfuture/LzHYfWY9axbZc7lKZnFeM62N2iLKIHGJbn-xeBQmrX4/1570616331/sites/default/files/inline-images/500X300_30.jpg)
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் நடிகர் தனுஷ் ஆயுத பூஜையை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
![sss](http://image.nakkheeran.in/cdn/farfuture/94lSkLV-A8n5BfUGdTwrsO1yYvXaZrES8sY14RWsv8I/1570616355/sites/default/files/inline-images/500x300-article-inside_33.jpg)