![D imman joining director Suseenthiran new movie](http://image.nakkheeran.in/cdn/farfuture/w2URKWM__rACJmF4j4qXQmusRkQUOVd2blKUKqhe2qU/1643098114/sites/default/files/inline-images/susee_1.jpg)
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் டி.இமான் தனது பிறந்தநாளை நேற்று (24.1.2022) கொண்டாடினர். இதனைதொடர்ந்த்து அவருக்கு திரைபிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் டி. இமானின் பிறந்தநாளுக்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து கூறிய இயக்குநர் சுசீந்திரன், தான் 7வது முறையாக டி.இமானுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும், பாடல் கம்போசிங் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார். இவர்களது கூட்டணியில் வெளியான 'பாண்டியநாடு', 'ஜீவா', 'பாயும் புலி', 'மாவீரன் கிட்டு', 'நெஞ்சில் துணிவிருந்தால்', 'கென்னடி கிளப்' ஆகிய படங்களில் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் 7வது முறையாக இந்த கூட்டணி இணையவுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.மிகப்பெரிய பட்ஜெட்டில், நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது துவங்கி நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மே 1 ஆம் தேதி துவக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.