Published on 10/09/2022 | Edited on 10/09/2022
![cobra movie ott release update out now](http://image.nakkheeran.in/cdn/farfuture/_EX7VDHo8643bf3TUrpvn_ZxJ_J2VKF2feMPzKcKnLA/1662814742/sites/default/files/inline-images/1892.jpg)
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'கோப்ரா' படம் தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட 5 மொழிகளில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. நீண்ட இடைவெளிக்கு பிறகு விக்ரம் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. ஆனால் படத்தில் விக்ரமின் நடிப்பு பலராலும் ரசிக்கப்பட்டது.
இந்நிலையில் கோப்ரா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கோப்ரா திரைப்படம் வரும் 23 ஆம் தேதி சோனி லீவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடித்து வரும் விக்ரம் அடுத்தாக மீண்டும் கோப்ரா படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.