Skip to main content

சென்னை மேயருடன் நயன்தாரா... வைரலாகும் புகைப்படம்

Published on 11/03/2022 | Edited on 11/03/2022

 

chennai mayor priya rajan and nayanthara photos goes viral

 

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா நடித்துள்ளனர். இப்படத்தை சவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்துள்ளள நிலையில் படக்குழு வெளியீட்டு பணியில் தீவிரம் காட்டி வருகிறது.  இப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

இந்நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் சென்னை தம்புச்செட்டி தெருவில் உள்ள காளியம்மாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது அங்கு வந்த சென்னை மேயர் பிரியா ராஜனை சந்தித்து பேசி, இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்தப் புகைப்படம் தற்போது  சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நயன்தாரா பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nayanthara instagram story issue

தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, தமிழில் சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூப்பர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இது மட்டுமல்லாமல் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனை இயக்கும் எல்.ஐ.சி படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. 

இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து 2022ஆம் ஆண்டு ஜூனில் திருமணம் செய்து கொண்டார். பின்பு வாடகை தாய் மூலம் உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகளை பெற்று கொண்டார். இதையடுத்து அழகு சாதன பொருட்கள் விற்கும் '9 ஸ்கின்' (9 Skin) என்ற நிறுவனத்தை தொடங்கினார். இதன் மூலம் தொழில்முனைவோராக  களம் இறங்கினார். இதனைத் தொடர்ந்து, ஃபெமி 9 (Femi 9) என்ற சானிட்டரி நாப்கின் பொருளை அறிமுகப்படுத்தினார். 

இதனிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கினார். அதில் தனது படங்களின் ப்ரொமோஷன், தனது குழந்தைகளின் புகைப்படங்கள், தனது தொழில் நிறுவனத்தின் விளம்பரம் என ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் கணவர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அன்ஃபாலோ செய்ததாக சர்சையானது. இதனால் அவரது திருமண உறவு குறித்து பல்வேறு சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. 

இதையடுத்து திருமண உறவு குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்க ஸ்டோரியில் ‘நான் இழந்துவிட்டேன்’ (I'm lost) என குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பலரும் பல்வேறு விதமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

சென்னை மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியது!

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Chennai mayor Priya's car was involved in an accident

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனது காரில் பயணித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த மேயரின் காரின் முன்னால் கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. இந்த கார் திடீரென திரும்பியதால் பின்னால் வந்து கொண்டிருந்த மேயரின் கார் மோதியது. அதே சமயம் மேயரின் காருக்கு பின்னால் வந்த லாரி ஒன்று மேயரின் காரின் மீது மோதியது.

இந்த கார் விபத்தில் மேயர் பிரியா நல்வாய்ப்பாக காயமின்றி தப்பினார். மேயரின் ஓட்டுநருக்கு மட்டும் லேசான உள்காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மேயர் காரின் முன் மற்றும் பின்பகுதிகள் பலத்த சேதம் அடைந்துள்ளன. விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை மேயர் பிரியாவின் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.