மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை சுபர்ணா ஜாஷ். கல்லூரியில் படிப்பதற்காக தன்னுடைய சொந்த ஊரான பர்த்வானிலிருந்து கொல்கத்தா வந்து தன் குடும்பத்துடன் தங்கியுள்ளார். இவருக்கு சினிமாவில் நடிகையாக வேண்டும் என்பதுதான் கனவு. அதனால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்துள்ளார்.
![subarna](http://image.nakkheeran.in/cdn/farfuture/F2nLFT4cYukWrwtEtcIqI25YdUJgRlVFORh1X9IqAwY/1581586996/sites/default/files/inline-images/subarna%20jash.jpg)
இந்த முயற்சியினால் சில சீரியல்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். அதை பயன்படுத்தி சினிமாவில் துணை நடிகையாகவும் நடித்திருக்கிறார். ஆனால், நாயகியாக நடிப்பதுதான் அவருடைய கனவு என்பதால் மீண்டும் வாய்ப்பு தேடிக்கொண்டே இருந்துள்ளார்.
![day night](http://image.nakkheeran.in/cdn/farfuture/GGIiCfZXi4EutKCc8xgklpEuidtt_Ha9vXESXXd_Qpg/1581587065/sites/default/files/inline-images/Day-Night-article-inside-ad_16.jpg)
இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி இரவு தனது அறையில் இருக்கும் மின்விசிறியில் தூக்கில் தொங்கியுள்ளார். மகளை தொங்கிய நிலையில் பார்த்த பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், திரைப்பட வாய்ப்பு கிடைக்காததால் கடந்த சில மாதங்களாகவே அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர். இதனால்தான் இந்த தவறான் முடிவை சுபர்ணா ஜாஷ் எடுத்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.