Published on 24/08/2022 | Edited on 24/08/2022
![atharvaa kuruthi aattammovie ott release date announced](http://image.nakkheeran.in/cdn/farfuture/GETAi6onXRvva6wnjnpFmvm6e6pdoVoDqVQCXjRqC_I/1661350439/sites/default/files/inline-images/189_6.jpg)
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் அதர்வா. 'தள்ளி போகாதே' படத்தை தொடர்ந்து ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள 'குருதி ஆட்டம்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இசை பணிகளை யுவன் ஷங்கர் ராஜா மேற்கொண்டார். 'ராக் ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் 'குருதி ஆட்டம்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி வருகிற 26-ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. இதனை ஆஹா நிறுவனம் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் தங்களது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து ஒரு புதிய போஸ்டரையும் பகிர்ந்துள்ளனர்.