Published on 17/02/2024 | Edited on 17/02/2024
![ashok selvan saba nayagan streaming in hotstar](http://image.nakkheeran.in/cdn/farfuture/MNTxmNW5NKgzSJ9ljVSWJcJ2D8l21C82kWVSF44YxQk/1708167473/sites/default/files/inline-images/195_21.jpg)
அசோக் செல்வன், மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி சௌத்ரி ஆகியோர் நடிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி வெளியான படம் சபா நாயகன். க்ளியர் வாட்டர் பிலிம்ஸ் மற்றும் ஐ சினிமா கேப்டன் மெகா என்டர்டெயின்மென்ட் என்ற இரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்திருந்த இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார்.
ஒரு இளைஞனின் பள்ளி வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை, கல்லூரிக்கு பின்னான வாழ்க்கை என மூன்று காலகட்டத்தில் அவன் சந்திக்கும் பெண்களைப் பற்றியும், அவனது காதல் பற்றியும் காமெடி கலந்து சொல்கிறது இப்படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கடந்த காதலர் தினத்தை முன்னிட்டு டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியானது.