![ammu abirami cook with comali pugazh joins new film](http://image.nakkheeran.in/cdn/farfuture/kEKIHW4BsVvUBSk_Q5QPsyhdZorJHTFpEODKQNnzGY4/1651583473/sites/default/files/inline-images/437_1.jpg)
மிதுன் ஆதித் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் 'பாலமுருகனின் குதூகலம்'. முழுக்க முழுக்க காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் உலகநாதன் சந்திரசேகரன் இயக்குகிறார். இவர் பட்டாசு, காக்கி சட்டை, கோடி, எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமாரிடம் துணை இணை இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
புதுமுக நடிகர் பாலமுருகன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக அம்மு அபிராமி நடிக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் குக் வித் கோமாளி” புகழ், பிஜார்ன் சுர்ராவ், சன்சீவி கோ சுவாமி, கவிதா பாரதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சுவாமிநாதன் கிளாப் போர்டு அடித்து திருப்பூரில் தொடங்கி வைத்தார். முழு வீச்சில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு விரைவில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.