![ajith met layca producer subaskaran](http://image.nakkheeran.in/cdn/farfuture/oE-iiyl2q5ZSbBFpmCKRhzEYNesLxp2NXtRrWlP4eVc/1661772439/sites/default/files/inline-images/1726.jpg)
வலிமை படத்தைத் தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் 'ஏகே 61' படத்தில் நடித்து வருகிறார் அஜித். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஹைதராபாத் மற்றும் சென்னை என மாறி மாறி நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் அஜித் லைகா நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரனுடன் சந்திப்பு நடத்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில் ஏகே 62 படம் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளை படக்குழு தொடங்கி விட்டதாகவும், அடுத்தாண்டு தொடக்கத்தில் ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என கூறப்படுகிறது.