Skip to main content

"மோசமான நாள், கெட்ட நேரம்" - விபத்தில் சிக்கிய ரம்பா

Published on 01/11/2022 | Edited on 01/11/2022

actress rambha car accident

90-களில் ரஜினி, கமல், அஜித், விஜய் எனப் பல பிரபலங்களுடன் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்பா. கடந்த 2010 ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் பத்மநாதனைத் திருமணம் செய்து கொண்டு கனடாவிலேயே குடியேறினார். பின்பு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து கேட்டு கோர்ட் வரை சென்றார். பிறகு சமாதானமாகி கருத்து வேறுபாடு நீங்கி தன் கணவருடன் தற்போது கனடாவில் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும் 1 ஆண் குழந்தையும் உள்ளது.

ad

இந்நிலையில், ரம்பா தனது சமூக வலைதளப் பக்கத்தில், தாங்கள் சென்று கொண்டிருந்த கார் சிறிது விபத்துக்குள்ளானதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு செல்லும்போது எங்கள் கார் மீது மற்றொரு கார் மோதியது. இதில் நானும் எங்கள் குழந்தைகளும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பி பாதுகாப்பாக உள்ளோம். அதே சமயம் என்னுடைய குழந்தை சாஷா இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார். தயவுசெய்து எங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Greetings from CM MK Stalin to chess player Gukesh

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. 

Greetings from CM MK Stalin to chess player Gukesh

இந்நிலையில் செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

இளம் வயதில் சாதனை படைத்த செஸ் வீரர் குகேஷ்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Chess player Gukesh who set a record at a young age

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று தமிழ்நாடு கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாதனை படைத்துள்ளார்.