Skip to main content

நடிகர் தனுஷுக்கு சிறிய விபத்து !

Published on 23/06/2018 | Edited on 23/06/2018
danush


கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கி கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாரி 2' படத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் வரலட்சுமி, வித்யா, கிருஷ்ணா, டோவினோ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

 

 


இந்நிலையில் நேற்று நடந்த படப்பிடிப்பில் வில்லன் டோவினோ தாமசுடன் தனுஷ் மோதுவதுபோல் ஒரு சண்டைக்காட்சி படமாக்கபட்டபோது யாரும் எதிர்பாராத விதமாக தனுஷின் வலது காலிலும், இடது கையிலும் பலமாக அடிபட்டது. இதையடுத்து உடனே படக்குழுவினர் தனுஷுக்கு முதலுதவி செய்து பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்..

 

 

 

 


 

சார்ந்த செய்திகள்