![actor amalhaasan mourns puneeth rajkumar's death](http://image.nakkheeran.in/cdn/farfuture/LvVzVEnX8T75Kzs2vhtruy4tbqrC078VB3qCdTSN3E8/1635510210/sites/default/files/inline-images/puneeth.jpg)
கன்னட சினிமா துறையில் முன்னணி நட்சத்திரமாக இருந்து வந்த நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். பெங்களூரில் வசித்து வந்த அவருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புனித் ராஜ்குமார் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரின் இறப்பு இந்தியத் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் புனித் ராஜ்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், அன்புத் தம்பி புனித் ராஜ்குமாரின் மரணச்செய்தி வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கர்நாடக திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.