Published on 24/06/2021 | Edited on 24/06/2021
![uggg](http://image.nakkheeran.in/cdn/farfuture/-CMDHVzN_f5mZ3pmg31gTUK0s0yBz2mof54tFJNkmmA/1624514225/sites/default/files/inline-images/Vijai-Vishwa-002.jpg)
தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர்கள் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பும், வந்த பின்பும் தங்கள் பெயர்களை மாற்றிக்கொள்வது வாடிக்கையாகிவரும் சூழலில் தற்போது நடிகர் அபி சரவணனும் தன் பெயரை 'விஜய் விஷ்வா' மாற்றிக்கொண்டுள்ளார். ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’, ‘பட்டதாரி’, ‘மாயநதி ’ ஆகிய படங்களின் மூலம் அறியப்பட்டவர் நடிகர் அபி சரவணன்.
இவர் தற்போது ‘சாயம்’, ‘கும்பாரி’ உட்பட பெயரிடப்படாத 9க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவருகிறார். மேலும், பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டுவரும் அபி சரவணன், தனது பெயரை 'விஜய் விஷ்வா' என்று மாற்றிக்கொண்டுள்ளார். மேலும் அவர், தனது சமூக வலைதளப் பக்கங்களிலும் பெயரை மாற்றிக்கொண்டார்.