வேல் டெக் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் ஊடகம் மற்றும் காட்சித் தொடர்பியல் புலம், நடத்திய நிகழ்ச்சியில் பிக் பாஸ் புகழ் நடிகர் ஆரவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சுமார் இரண்டாயிரம் மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் ஆரவ், விடாமுயற்சி திரைப்படம் குறித்த தன்னுடைய அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார். திறமை அறிவு எல்லாவற்றையும் விட விடாமுயற்சியே வெற்றி தரும் எனக் கூறி மாணவர்களுக்கு உற்சாகமூட்டினார்.
மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இந்நிகழ்ச்சியில் வேல் டெக் சட்டப் புல முதன்மையர் பேராசிரியர் வேணுகோபால் மற்றும் வணிகவியல் புல முதன்மையர் பேராசிரியர் ஜெயபால் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஊடகம் மற்றும் காட்சித் தொடர்பியல் புல முதன்மையர் பேராசிரியர் சுரேஷ் பால் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்வின் மையமாக நடிகர்கள் ஆரவும் அஜித்குமாரும் இணைந்திருக்கும் புகைப்படமும் ஊடகத்துறை மாணவர் யோகித் வரைந்த ஆரவின் ஓவியமும் நினைவு பரிசாக வழங்கப்பட்டன.