Skip to main content

“புகைப்படத்தை தொலைத்துவிட்டு மன வேதனை அடைந்தேன்” - அமரன் பட இயக்குநர்

Published on 05/02/2025 | Edited on 05/02/2025
rajkumar periyaamy thanked maniratnam regards amaran 100 days

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் கடந்த ஆண்டு தீபாவளியன்று(அக்டோபர் 31) வெளியான படம் அமரன். இந்தப் படம் வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்த நிலையில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அவரது மனைவியாக சாய் பல்லவி நடித்திருந்தார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மணிரத்னத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சியுடன் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அமரன் படம் வெளியாகி 100 நாட்களை நெருங்கவுள்ளது. மணி சார், நீங்கள் தான் நான் திரைப்படங்களைப் பற்றி கனவு காணவும் திரைப்படங்களை இயக்க காரணமாகவும் இருந்தீர்கள். நான் முதன்முதலில் புகைப்படம் எடுக்க விரும்பிய நபர் நீங்கள்தான். அது 2005ல் நடந்தது. ஆனால் அதை நான் தொலைத்துவிட்டேன். அதற்காக மன வேதனை அடைந்தேன். 

உங்களுடன் இப்போது புகைப்படம் எடுக்க இரண்டு தசாப்தங்கள், இரண்டு படங்கள் முடித்த பிறகு எனக்கு தைரியம் வந்துள்ளது. உங்கள் போஸ்டர்களைப் பார்த்து பிரமித்துப் போனதிலிருந்து, உங்கள் அருகில் நிற்பது வரை... நான் வாயடைத்து போயுள்ளேன். அமரன் படத்துக்கும் எனக்கும் நீங்கள் கொடுத்த ஊக்கத்து நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்