முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், தன்னை உடனடியாக திருமணம் செய்ய நினைக்கும் நண்பரை பற்றி பணக்காரப் பெண் கொடுத்த ஒரு வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்.
திருமணமாகி டைவர்ஸ் ஆன பெண் ஒருவர் என்னிடம் வந்து கேஸ் கொடுத்தார். தானும், ஒரு பையனும் நண்பர்களாக இருக்கிறோம். திடீரென்று அந்த பையன், தன்னை உடனே திருமணம் செய்ய வேண்டும் என்கிறான். அவனை அவளுக்கு பிடித்திருந்தாலும் அவனுடைய பேச்சு வித்தியாசமாக இருப்பதால் இவளுக்கு பயம் இருந்திருக்கிறது. அதனால், அவனை பற்றி விசாரிக்க வேண்டும் என்று கூறினாள். தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரித்ததில், திருமணமாகாத அந்த பையன் இந்த பெண்ணை விட இரண்டு வயது சிறியவன் எனத் தெரிந்தது. அந்த பெண் பேசிய ஒரு சில விஷயங்களை வைத்து அந்த பெண், உயர் வர்க்க மக்கள் சேர்ந்தவர் எனப் புரிந்தது.
நாங்கள், வழக்கம்போல் அந்த கேஸை எடுத்துக்கொண்டு அந்த பையனை ஃபாலோவ் செய்கிறோம். நன்றாக படித்த அந்த பையன், செண்ட்ரல் கவர்மெண்ட்டில் வேலை பார்க்கும் நபருடைய பிள்ளை. அப்பர் மிடில் கிளாஸ் வகுப்பைச் சேர்ந்த அந்த பையன், நல்ல வருமானம் வரக்கூடிய இரண்டு, மூன்று தொழில்களைச் செய்து வருகிறார். கண்டிப்பாக எதிர்காலத்தில் நன்றாக வரக்கூடிய பையன் என்பதை கண்டுபிடித்தோம்.
இதையடுத்து, அந்த பெண்ணை அழைத்துப் பேசினோம். குடும்பம் மட்டுமல்லாது, இந்த பெண்ணும் நல்ல பிசினஸ் ஒன்றை செய்து வருகிறார். தன்னை பிடித்து தான் திருமணம் செய்ய விரும்புகிறாரா? அல்லது தனது பணத்திற்காக திருமணம் செய்ய விரும்புகிறாரா? என்பது தான் இந்த பெண்ணுடைய கேள்வியாக இருந்தது. நாங்கள் பார்த்த வரையில் அந்த பையன் தொழில்கள் மூலம் நன்றாக சம்பாரிக்கின்றான் என்பதை ரிப்போர்ட்டாக கொடுத்தோம். தற்போது வரை அவன் யாரையும் எதிர்பார்க்காமல் இருக்கின்றான். எதிர்காலத்தில் அவன் பணம் கேட்பானா? கேட்க மாட்டானா? என்பதை நாம் இப்போதே முடிவு செய்ய முடியாது என்பதை கன்க்ளூசனாக கொடுத்தோம். வேண்டுமென்றால், அந்த பையனோடு நன்றாக பழகிய பின் திருமணம் செய்து கொள் என்பதை தான் அந்த பெண்ணுக்கு யோசனையாக சொன்னோம்.