முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், மகனின் இரண்டாவது திருமணத்திற்கு பார்த்திருந்த பெண்ணை துப்பறியச் சொன்ன ஒரு வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்.
ப்ரி மேரிட்டல் செக்கிற்காக பையனது பெற்றோர் வந்திருந்தனர். மகனுக்கு ஏற்கனவே விவாகரத்து ஆகி இருக்கிறது. இப்பொழுது இரண்டாவது திருமணம் செய்து வைக்கும் முன்னர் பெண்ணை பற்றி விசாரித்து சொல்லுமாறு கேட்டனர். இருவருக்குமே ஏற்கனவே திருமணம் ஆனதால் எங்களை பொறுத்த வரைக்கும் இது போஸ்ட் மேரிட்டல் வெரிஃபிகேஷன் தான். எனவே திருமணத்திற்கு பார்த்திருக்கும் பெண்ணின் முதல் கணவரைப் பற்றி நாங்கள் தகவல் எடுக்க ஆரம்பித்தோம். அந்தப் பெண்ணின் விவாகரத்து ஆன பேப்பரை பார்த்தபோது அதில் முதல் கணவன் ஆண்மையற்றவராக இருக்கிறார். அதனால எங்கள் பெண்ணை அவருடன் வாழ வைக்க முடியாது என்று மியூச்சுவல் கன்சென்ட் போட்டு விவாகரத்து வாங்கி இருந்தனர். இப்பொழுது பையன் வீட்டில் பார்த்திருந்த பெண்ணின் முந்தைய கணவன் நிஜத்திலேயே இம்போட்டண்ட்டா இல்லையா என்று கண்டுபிடிக்க வேண்டும்.
அந்த பேப்பரில் குறிப்பிட்டு இருந்த முதல் கணவனின் அட்ரஸ் வைத்து வீட்டிற்கு சென்றால் அங்கு ஆள் இல்லமால் இருந்தது. பத்து நாட்கள் அங்கேயே இருந்து பார்த்தும் ஆள் நடமாட்டம் இல்லை. அக்கம் பக்கத்தில் கடைகளில் விசாரித்தோம். விசாரித்ததில் அந்த பையனுக்கு இன்னொரு கல்யாணம் ஆகி குழந்தை பிறந்திருக்கிறது. எனவே குழந்தையை பார்க்க மூன்று மாத முன்பு எல்லாரும் ஊருக்கு சென்று விட்டார்கள் என்றார்கள். சொன்னதிலேயே அந்த பெண்ணின் முதல் கணவன் இம்போட்டண்ட் என்று சொல்லி விவாகரத்து வாங்கியது பொய் என்று புரிந்து விட்டது.
ஆதாரம் கிடைத்ததும் அதை பையன் வீட்டில் ரிப்போர்ட்டாக கொடுத்தோம். திருமணத்தை நிறுத்துவதாக முடிவெடுத்து தான் சென்றனர். அதன் பின் என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆனால், இதுவே குழந்தையுடன் தொடர்பு கொண்ட சந்தேகம் என்பதால் விசாரித்ததிலேயே சுலபமாக ஆதாரம் எடுக்க முடிந்தது. இதுவே உடல்நிலையில் பிரச்சனை என்று கூறியிருந்தால் எங்களால் பிட்னஸ் சர்டிபிகேட் கேட்டிருக்க முடியாது. எனவே அரசாங்கம் தான் இதில் கவனம் கொண்டு திருமணம் ஆகும் முன்பு இருவரும் பிட்னஸ் சர்டிபிகேட் எடுக்க வேண்டும் என்பதை கட்டயாமாக்க வேண்டும்.