Skip to main content

ஐபிஎல் போட்டியின் சிறந்த பந்து வீச்சாளர்; ரெய்னாவின் தேர்வு யார்?

Published on 12/03/2023 | Edited on 12/03/2023

 

Who is Raina's pick as the best bowler in IPL?

 

ஐபிஎல் 2023 கொண்டாட்டம் இன்னும் சில தினங்களில் தொடங்கப்பட உள்ள நிலையில் மகளிர் பிரீமியர் லீக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இம்முறை ஒளிபரப்பு உரிமையை வாங்கியுள்ள ஜியோ சினிமா இப்பொழுதே ஐபிஎல் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்த துவங்கியுள்ளது.

 

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஆர்.பி.சிங், ஓஜா, உத்தப்பா, பார்த்திவ் படேல் ஆகியோர் கலந்து கொண்ட கலந்துரையாடல் நிகழ்வினை ஜியோ சினிமா நடத்தியது. அப்போது சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவிடம், ஐபிஎல்லில்  அனைத்து நேரங்களிலும் சிறந்த பந்துவீச்சாளர் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அவருக்கு மலிங்கா, பும்ரா, சினில் நரைன், ரஷித் கான், பிராவோ ஆகியோரது பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் ரெய்னாவோ சற்றும் யோசிக்காமல் 39 வயதான முன்னாள் இலங்கை அணியின் கேப்டனான மலிங்கா தான் சிறந்த பந்துவீச்சாளர் என்றார்.

 

இது குறித்து விளக்கம் கொடுத்த ரெய்னா, “பந்து வீச்சாளராக போட்டியில் ஆதிக்கம் செலுத்துவது மிகக் கடினமான செயல். அதுமட்டுமின்றி 2014 ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். மலிங்கா அணிக்கு சிறந்த தரத்தை கொண்டு வந்துள்ளார்” என்றார். மேலும், ரெய்னாவின் இந்த தேர்வை ஆர்.பி.சிங், ராபின் உத்தப்பா, பார்த்திவ் படேல் ஆகியோர் அங்கீகரித்தனர். ஆனால் முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஓஜா மட்டும் தனது தேர்வாக ஹர்பஜன் சிங் தான் சிறந்த பந்து வீச்சாளர் என்றார்.

 

 

Next Story

சுரேஷ் ரெய்னா குறித்து சூர்யா

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
suriya about suresh raina

ஐபிஎல் தொடர், தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றதை அடுத்து, தற்போது அதே பாணியில் இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் என்ற புதிய கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களைப் போன்று விளையாட வேண்டும் என்ற கனவோடு உள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்காக இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா மற்றும் ஸ்ரீ நகர் என 6 அணிகள் பங்கேற்கவுள்ளன. சென்னை அணியை சூர்யாவும், மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூரு அணியை ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்‌ஷய் குமாரும், ஐதராபாத் அணியை ராம்சரணும் வாங்கியுள்ளனர். 

இந்த போட்டி நேற்று (06.03.2024) மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. அப்போது சச்சின், சூர்யா, அக்‌ஷய் குமார், ராம் சரண், ரவிசாஸ்திரி ஆகியோர் ஆர்.ஆர்.ஆர் பட பாடல் ‘நாட்டு நாட்டு...’ பாடலுக்கு நடனமாடினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. பின்பு இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவும் கலந்து கொண்ட நிலையில், அவரை சூர்யா தனது குழந்தைகளுடன் சந்தித்தார். 

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சுரேஷ் ரெய்னா, தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, சூர்யா குடும்பத்தை சந்தித்தது மகிழ்ச்சி என்றும் விரைவில் சென்னையில் சந்திப்போம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் சுரேஷ் ரெய்னாவின் பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சூர்யா, “வாழ்நாள் முழுவதும் உள்ள மெமரிஸ் பிரதர். உங்கள் அன்பிற்கு நன்றி. விரைவில் சென்னையில் சந்திப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

Next Story

ரெய்னாவின் சாதனையை நெருங்கும் கோலி; சுருண்ட ராஜஸ்தான்; பெங்களூர் அபாரம்

Published on 14/05/2023 | Edited on 14/05/2023

 

kohli closes in on Raina's record; Curly Rajasthan; Bangalore is awesome

 

16 ஆவது ஐபிஎல் தொடரின் 60 ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூர் - ராஜஸ்தான் அணிகள் மோதின. ஜெய்ப்பூர் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

 

முதலில் விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 171 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக டுப்ளசிஸ் 55 ரன்களையும் மேக்ஸ்வெல் 54 ரன்களையும் எடுத்தனர். ராஜஸ்தான் அணியில் ஆசிஃப், ஜாம்பா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். சந்தீப் சர்மா 1 விக்கெட்டை கைப்பற்றினார். 172 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 10.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 59 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. சிறப்பாக பந்து வீசிய பெங்களூர் அணியில் பேர்னல் 3 விக்கெட்களையும் கரண் சர்மா, ப்ரேஸ்வெல் தலா 2 விக்கெட்களையும் மேக்ஸ்வெல், சிராஜ் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

 

இன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் ஜாம்பா பந்துவீச்சில் வெளியேறினார். ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை ரோஹித் சர்மாவுடன் தினேஷ் கார்த்திக் பகிர்ந்து கொண்டுள்ளார். இருவரும் இதுவரை 16 முறை டக் அவுட் ஆகியுள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பர் அல்லாது அதிக கேட்ச்கள் பிடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி 104 கேட்சுகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். முதலிடத்தில் சுரேஷ் ரெய்னா 109 கேட்சுகளுடன் உள்ளார். ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் 4 முறை டக் அவுட் ஆன வீரர்களின் பட்டியலில் ஜாஸ் பட்லரும் இணைந்துள்ளார். அவர் இன்றைய போட்டியுடன் சேர்த்து நடப்பு ஐபிஎல் தொடரில் 4 முறை டக் அவுட் ஆகியுள்ளார். 

 

இன்றைய போட்டியில் 59 ரன்களை மட்டும் எடுத்ததன் மூலம் ராஜஸ்தான் அணி தனது இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன் பெங்களூர் அணிக்கு எதிராக 2009 ஆம் ஆண்டில் 58 ரன்களை எடுத்ததே குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது. ஐபிஎல் போட்டிகளில் மூன்றாவது குறைந்தபட்ச ஸ்கோரை ராஜஸ்தான் அணி இன்று பதிவு செய்துள்ளது.