Skip to main content

குல்தீப் யாதவ் ஏன் ஸ்பெஷல்...?

Published on 10/11/2018 | Edited on 10/11/2018

சுழற்பந்து வீச்சில் 'கூக்ளி', 'ராங் ஆன்', 'லெக் பிரேக்', 'பிலிப் ஆன்',... போன்ற ஏராளமான சுழல் பாணிகளை வைத்திருக்கிறார் இன்றைய இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். இவரிடம் எத்தனையோ சுழல் பாணிகள் இருந்தாலும், பேட்ஸ்மேன்கள் கண்டு அஞ்சுவதும், இரசிகர்கள் கொண்டாடுவதும் இவரிடம் இருக்கும் 'லெக் பிரேக்' பந்து வீச்சு முறையைத்தான். இதற்குமுன் இந்திய அணியில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினும் இந்தப் பாணியை பின்பற்றியிருக்கிறார். ஆனால், ஒரு இடதுகை சுழல்பந்து வீச்சாளர் லெக் பிரேக் முறையில் பந்தை வீசுவது மிகவும் கடினமான ஒன்று. 

 

 

kk

 

 

இடதுகை லெக் பிரேக் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு சீனாமேன் பவுலர் என்ற பெயர் உள்ளது. அந்த வகையில் இந்திய அணியின் முதல் சீனாமேன் பவுலர் குல்தீப் யாதவ்தான். இவர் ஏன் இப்படி அழைக்கப்படுகிறார் ? இடதுகை லெக் பிரேக் சுழல்பந்து வீச்சாளருக்கு ஏன் இந்த பெயர் ? யார் அந்த சீனாமேன் ?

 

1933-ம் ஆண்டுகளில் மேற்கிந்திய தீவுகள் அணியில் எல்லிஸ் புஸ் அச்சாங், இடதுகையில் லெக் பிரேக் பந்துகளை எளிதாக வீசுவார். இவரின் இந்த வித்தியாசமான பந்துவீச்சு முறையால் எல்லிஸ் புஸ் அச்சாங்கை உலகளவில் பிரபலப்படுத்தியது. கறுப்பினத்தவர்கள் அதிகமாக இருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியில், எல்லிஸ் புஸ் அச்சாங் 'ஆசிய'ர்களை போல காட்சியளிப்பாராம். அதனால் அவரையும் அவரின் பந்து வீச்சு முறையையும் சீனாமேன் என்று புகழ ஆரம்பித்திருக்கின்றனர். அவரை தொடர்ந்து இடதுகையில் லெக் பிரேக் சுழல்பந்து வீசுபவர்களை சீனாமேன் என்று அழைப்பது வழக்கமாகியிருக்கிறது.