தென் கொரிய நாட்டில் விண்டர் ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்போது திடீரென்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஹாக்கிப் போட்டியின் போது குறுக்கிட்டதால் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது.
தென் ஆப்பிரிக்க நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், வட மற்றும் தென் கொரிய நாடுகள் ஒரே கொடியில் கீழ் களமிறங்கியுள்ளன. சமீபத்திய போர்ப்பதற்றங்களுக்கு மத்தியில் இந்த இரண்டு நாடுகளின் ஒருங்கிணைப்பு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும், இந்தப் போட்டிகளின் தொடக்க விழாவில் வட கொரிய அதிபர் கிம்மின் இளைய சகோதரி விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை நடைபெற்ற கொரியா மற்றும் ஜப்பான் அணிக்கு இடைடே ஐஸ் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியின் போது கொரிய அணியின் சியர் லீடர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு கொரிய அதிபர் கிம் ஜோங் உன்-ஐப் போலவே இருக்கும் ஒருவர் திடீரென வந்து நின்றார். இதனால், சில நிமிடங்களுக்கு அங்கு குழப்பம் நிலவியது. சியர் லீடர்களில் சிலர் அது கிம்மைப் போலவே இருக்கும் வேறு ஒருவர் என்பதைக் கண்டுபிடித்து கூச்சலிட்டனர். உடனே, அந்த நபர் தன் கைகளை அசைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். அரங்கில் இருந்த பெண் காவலர் அந்த நபரை அங்கிருந்து அழைத்துச் சென்றார்.
முன்னதாக, ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியபோது, கிம் மற்றும் ட்ரம்பைப் போலவே இருக்கும் இரண்டு பேர் ஒன்றாக நின்று மக்களை வரவேற்றது குறிப்பிடத்தக்கது.