ஐ.பி.எல். கிரிக்கெட், ப்ரோ கபடி வரிசையில் அடுத்து இணையப்போகும் கோ-கோ விளையாட்டு. இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டான கோ-கோ, ஐ.பி.எல். போன்று நடத்தத் திட்டமிட்டிருப்பதாக இந்திய கோ-கோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த தொடருக்கு ‘அல்ட்டிமெட் கோகோ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
2008-ம் ஆண்டு ஐ.பி.எல். துவங்கப்பட்டது. அது உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து ஐ.எஸ்.எல்., கால்பந்து, பிரிமியர் லீக் பாட்மின்டன், ஹாக்கி, மல்யுத்தம், டென்னிஸ், ப்ரோ கபடி, புரோ வாலிபால் என இதன் பட்டியல் தற்போது அல்ட்டிமெட் கோகோவிற்கு வந்துள்ளது.
அல்ட்டிமெட் கோகோவின் முதல் தொடர் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய கோகோ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கவுள்ளதாகவும் அதில் ஒவ்வொரு அணியிலும் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 21 வயதுக்கு உட்பட்ட இரண்டு வீரர்களும் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.