![t20 cricket match series india win](http://image.nakkheeran.in/cdn/farfuture/jXIw87ShwwyvnXeqE1A6TFh2vZx2g7N5uMfxv7hQk9A/1616091308/sites/default/files/inline-images/india%204523.jpg)
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து, 186 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து, 177 ரன்களை மட்டுமே எடுத்துத் தோல்வி அடைந்தது.
![t20 cricket match series india win](http://image.nakkheeran.in/cdn/farfuture/I-VXz6CJiYSuOKp0kpMJzI1eXY4ZMKEM9R149wTZdUk/1616091318/sites/default/files/inline-images/eng123.jpg)
இந்திய அணித் தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 57, ரிஷப் பந்த் 30, ஸ்ரேயாஸ் ஐயர் 37 ரன்களை எடுத்தனர். அதேபோல், இங்கிலாந்து அணித் தரப்பில் அதிகபட்சமாக பென்ஸ்டோக்ஸ் 46, ஜாசன் ராய் 40 ரன்களை எடுத்தனர்.
5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை '2- க்கு 2' எனும் வெற்றிக் கணக்கில் சமன் செய்தது இந்திய அணி. டி20 தொடரை வெல்வதற்கான இறுதிப் போட்டி மார்ச்- 20- ஆம் தேதி நடைபெறுகிறது.