Published on 22/10/2019 | Edited on 22/10/2019
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் அகமது நீக்கப்பட்டதை தொடர்ந்து அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற போவதாக தகவல்கள் வெளியாகின.
![sarfaraz ahmad wife drags dhoni into retirement debate](http://image.nakkheeran.in/cdn/farfuture/YAbKyO6jdkqAmR4CBplvbDuWNgGyBLzjmFc9M5iwP3c/1571726692/sites/default/files/inline-images/dhonisarf.jpg)
இந்நிலையில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள சர்ஃபராஸ் அகமதின் மனைவி, தோனியின் வயதை ஒப்பிட்டு காட்டமாக பதிலளித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், "என் கணவர் சர்ஃபராஸ் அகமது இப்போதே ஏன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டும். இப்போது தான் அவருக்கு 32 வயது ஆகிறது. ஆனால் தோனிக்கு என்ன வயதாகிறது தெரியுமா?. அவர் இப்போதும் விளையாடி வருகிறார் தானே? அவரென்ன கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாரா?. அதேபோல தான், என்னுடைய கணவர் இந்த சரிவிலிருந்து விரைவில் மீண்டு வலிமையுடன் திரும்புவார். எனது கணவர் ஒரு போராளி, அவர் மீண்டும் திரும்பி வருவார்" என்றார்.