இங்கிலாந்தில் நடந்துவரும் உலகக்கோப்பை தொடரில் கடந்த செவ்வாய்கிழமை நடந்த வங்கதேசத்துடனான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதியை உறுதி செய்தது.

இந்த நிலையில் இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ரோஹித் ஷர்மா சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இதனையடுத்து இந்த போட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோலி, ரோஹித் தலைசிறந்த ஒருநாள் வீரர் என கூறினார்.
அப்போது பேசிய அவர், "கடந்த சில வருடங்களாக நான் ரோகித் ஷர்மாவின் ஆட்டத்தை கவனித்து வருகிறேன். அதன்படி என்னை பொறுத்தவரை உலகிலேயே தலை சிறந்த ஒருநாள் போட்டி வீரர் ரோகித் தான். அவர் நன்றாக விளையாடும் போது அணியின் ஸ்கோர் தானாகவே உயரும். அவரின் தற்போதைய ஆட்டம் எனக்கு மிகவும் திருப்திகரமாக இருப்பதோடு, அவரின் இந்த ஆட்டம் மற்ற வீரர்களுக்கு ஒரு ஊக்கமாக அமைகிறது. அதேபோல கடந்த போட்டியில் பங்களாதேஷ் அணியும் சிறப்பாக விளையாடியது. இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது" என கூறினார்.