Published on 17/06/2019 | Edited on 17/06/2019
இங்கிலாந்து நாட்டில் நடந்துவரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இந்த வெற்றியை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வென்ற அதே நேரம் நேற்று இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் எப்.ஐ.ஹெச் தொடரை வென்றுள்ளன. இந்திய ஆடவர் ஹாக்கி அணி நேற்று நடந்த இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 5-1 என்ற கோல் கணக்கிலும், இந்திய மகளிர் அணி போலந்தை 5-0 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. ஒரே நாளில் இந்திய அணி மூன்று மிகப்பெரிய வெற்றிகளை பெற்றிருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.