Skip to main content

இமாலய வித்தியாசத்தில் இங்கிலாந்திற்கு பதிலடி கொடுத்த இந்தியா!

Published on 16/02/2021 | Edited on 16/02/2021

 

ashwin

 

இந்தியா - இங்கிலாந்து இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி, சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 329 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா சதமடித்து 161 ரன்கள் குவித்தார். ரஹானே, ரிஷப் பந்த் அரைசதமடித்தனர். இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, முதல் இன்னிங்சில் அந்த அணி 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அஸ்வின் ஐந்து விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

 

இதனையடுத்து, 195 ரன்கள் முன்னிலையோடு களமிறங்கிய இந்திய அணி, அஸ்வின் சதத்தாலும், விராட் கோலியின் அரைசதத்தாலும், இங்கிலாந்திற்கு 482 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸைப் போலவே தடுமாறியது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 53 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

 

இதனையடுத்து, நான்காம் நாள் ஆட்டமான இன்றும், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக அணியின் கேப்டன் ஜோ ரூட் 33 ரன்கள் எடுத்தார். இறுதியில் அந்த அணி 164 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றதோடு, முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் அக்ஸர் படேல், ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பிலும் இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது.