Skip to main content

இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் குறித்து வெளியான புது அப்டேட்!

Published on 18/11/2020 | Edited on 18/11/2020

 

india

 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அத்தொடருக்குப் பின், இந்தியாவிற்கு வரும் இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான இத்தொடரில் 4 டெஸ்ட், 4 ஒருநாள், 4 இருபது ஓவர் போட்டிகள் நடைபெற உள்ளன.

 

இத்தொடருக்குப் பின் 2021 -ஆம் ஆண்டிலேயே இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மற்றுமொரு தொடர் நடைபெற உள்ளது. இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் அத்தொடருக்காக, இந்திய அணி ஜூலை இறுதியில் இங்கிலாந்து செல்ல இருக்கிறது. இத்தொடரின் போது 5 டெஸ்ட் போட்டிகள் மட்டும் நடைபெற உள்ளன.

 

5 டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் நாள் மற்றும் இடம் குறித்தான விவரங்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, ஆகஸ்ட் 4 -ஆம் தேதி ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்க உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12 -ஆம் தேதியும், மூன்றாவது டெஸ்ட் ஆகஸ்ட் 25 -ஆம் தேதியும், நான்காவது டெஸ்ட் செப்டம்பர் 2 -ஆம் தேதியும், ஐந்தாவது டெஸ்ட் செப்டம்பர் 10 -ஆம் தேதியும் முறையே லார்ட்ஸ், எமரால்டு ஹெடிங்லி, கியா ஓவல், எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் ஆகிய மைதானங்களில் நடைபெற  உள்ளன.