Skip to main content

இந்தியா - பாகிஸ்தான் நட்புக்காக... - சோயிப் மாலிக் சொல்லும் வழி

Published on 08/09/2018 | Edited on 08/09/2018
malik

 

 

 

இந்தியா - பாகிஸ்தான் இடையே நட்புறவு அதிகரிக்க அதிக போட்டிகளில் விளையாட வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார். 
 

துபாயில் நடக்கவிருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், செப்டம்பர் 19-ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கின்றன. இந்தத் தொடரில் ஆறு அணிகள் மோதினாலும், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மீதான எதிர்பார்ப்பு என்பது அதிகரித்து வருகிறது. இதுகுறித்து இந்திய அணியின் தரப்பில் இருந்து எந்தக் கருத்தும் யாரும் தெரிவிக்கவில்லை. என்றாலும், பாகிஸ்தான் வீரர்கள் சிலர் நேர்மறையான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். 
 

 

 

இந்நிலையில், இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரரான சோயிப் மாலிக், “இந்தியா-பாகிஸ்தான் அணிகள் தொடர்ந்து பல போட்டிகளில் விளையாட வேண்டும். இதன்மூலம், இரு நாடுகளுக்கு மட்டும் இன்றி உலக நாடுகளுக்கு உற்சாகம் அதிகரிக்கும். மேலும், இதன்மூலம் இருநாட்டு உறவும் மேம்படும் என்பது என் எண்ணம். மற்றவர்கள் நினைப்பது போல் அல்லாமல், இருநாட்டு வீரர்கள் இடையில் மிகச்சிறந்த நட்பு நிலவும். களத்தில் நாங்கள் வீரர்களாக மட்டுமே இருந்திருக்கிறோம். களத்திற்கு வெளியில் நட்பு பாராட்டுவதோடு, ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தியிருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.