Published on 20/07/2019 | Edited on 20/07/2019
சமீபத்தில் நடந்து முடிந்த கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி முதலிடத்தை பிடித்திருந்தது. ஆனால், அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறியது.
![dhoni's friend about his retirement from international cricket](http://image.nakkheeran.in/cdn/farfuture/fcxYXD4Pyz2uWL3xQMeMOmXdLK_T7_uDDZba_Ct4WI8/1563607833/sites/default/files/inline-images/dhonistr_0.jpg)
இந்நிலையில் இந்திய அணி அடுத்தடுத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் தோனி ஓய்வை அறிவிப்பார் எனவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்து அவரது நண்பரும், மேலாளருமான அருண் பாண்டே புதிய தகவல் ஒன்றை அளித்துள்ளார். தோனியின் ஓய்வு குறித்து பேசிய அவர், "இப்போதைக்கு தோனி உடனடியாக ஓய்வு பெறும் திட்டம் ஏதுமில்லை. அவர் ஒரு மிகச்சிறந்த வீரர். ஆனால் அவரது ஓய்வு குறித்த தீராத யூகங்கள் வருவது துரதிர்ஷ்டமே" என கூறியுள்ளார்.