Skip to main content

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி தோல்வி!

Published on 22/09/2020 | Edited on 23/09/2020

 

hj

 

கரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 13-ஆவது ஐ.பி.எல் தொடர் கடந்த 19-ஆம் தேதி அமீரகத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. ஐ.பி.எல் நடைபெறுமா என்பது குறித்து பெருத்த சந்தேகம் நீடித்து வந்த நிலையில், ஐ.பி.எல் தொடர் அறிவிக்கப்பட்டது ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்தது. மேலும் சர்வதேச ஓய்வு அறிவிப்பிற்குப் பிறகு, தோனி தற்போது களம் கண்டுள்ளார். 

 

முதல் போட்டியில் சென்னை வெற்றி பெற்ற நிலையில், இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இரண்டாவது போட்டியில் மோதியது. தற்போது டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச முடிவு செய்தது. ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான சாம்சன் அரை சதம் அடித்தார். அவர் 74 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த வீரர்களும் அதிரடி காட்டியதால் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழந்து 216 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாட தொடங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. தோனி கடைசி ஓவரில் ருத்ரதாண்டவம் ஆடியும் சென்னை அணிக்கு வெற்றி வசமாகவில்லை. முடிவில் 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.