நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை, 2018-ஆம் ஆண்டு 14-ஆவது முறையாக நடக்கவிருக்கிறது. இது இந்தியாவில் நடக்கவிருக்கிறது. இந்தியாவில் நடப்பது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 1982-ஆம் ஆண்டு மும்பையில் முதல் முறையாக ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டி நடந்தது, இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. அடுத்தது 2010-ஆம் ஆண்டு டெல்லியில் நடந்தது, இதில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. தற்போது வரும் நவம்பர் 28-ஆம் தேதி மூன்றாவது முறையாக மீண்டும் இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் பதினாறு அணிகள் பங்கேற்கவுள்ளன. 2018 நவம்பர் 28 முதல் டிசம்பர் 15 வரை போட்டிகள் நடக்கவுள்ளன. இதுகுறித்து ஒரிசா முதலமைச்சர் நவின் பட்நாயக் ஒரு சுவாரசியமான அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார். 2018-க்கான ஆண்கள் ஹாக்கி உலக கோப்பைக்கு உலகளவில் பிரபலமான தமிழ்நாட்டின் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், புகழ் பெற்ற கவிஞரும் பாடல் ஆசிரியருமான குல்ஸார் எழுத்தில் 'ஜெய் ஹிந்த் ஜெய் இந்தியா' ( "Jai Hind Hind, Jai India") என்னும் பாடல் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்தப் பாடலை உலகக் கோப்பை தொடக்கவிழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் அரங்கேற்றுவார் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியா 1979-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த இறுதி ஆட்டத்தில் வென்று, உலகக் கோப்பையை வென்றது. இந்த ஒரு முறை மட்டுமே உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நம் கிரிக்கெட் எதிரியாகக் கருதப்படும் பாகிஸ்தான் நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது என்பதும் அதில் 1982-ஆம் ஆண்டு இந்தியாவில், மும்பையில் நடந்த போட்டியில் மேற்கு ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் வென்றதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 2014-ஆம் ஆண்டு இறுதியாய் நெதர்லாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றுள்ளது.