உலகக் கோப்பை லீக் போட்டியின் 42வது லீக் ஆட்டம் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் 25 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து இப்ராஹிமும் 15 ரன்கள் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த கேப்டன் சஹீதி 2 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். ரஹ்மத் 26 ரன்களுக்கு ஆட்டம் இருந்தார்.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழ அஸ்மத்துல்லா மட்டும் பொறுமையாக விளையாடினார். அடுத்து வந்த வீரர்கள் நபி 2 ரன்களும், ரஷித்கான் 14 ரன்களும், நூர் அகமத் 26 ரன்களும் முஜிப் 8 ரன்களும், நவீன் 2 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அஸ்மத்துல்லா மட்டும் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நின்று 97 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 50 அவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் எடுத்தது.தென்னாபிரிக்கா அணி சார்பில் ஜெரால்டு 4 விக்கெட்டுகளும், மகராஜ், எங்கிடி 2 விக்கெட்டுகளும், பெலுக்வயோ 1 விக்கெட்டும் எடுத்தனர்.
245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி ஓரளவு நிதானமாக தொடங்கியது. அந்த அணியின் கேப்டன் பவுமா 23 ரன்களில் வெளியேறி இம்முறையும் ஏமாற்றம் அளித்தார். டி காக் 41 ரன்கள் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த வேன் டெர் டுசைன் நிலைத்து ஆட, மார்க்ரம் 25 ரன்களில் வெளியேறினார். கிளாசன் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். வேன் டெர் டுசைன் 38 ரன்களுடனும், மில்லர் 3 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். தென்னாபிரிக்க அணி 25 ஓவர்களில் 145-4 என எடுத்து ஆடி வருகிறது.