சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு வருடங்கள் கழித்து ஐ.பி.எல்லில் விளையாடுகிறது. இதனால் தமிழ் பேசும் அனைவரும்உற்சாகத்தில் உள்ளனர். இதை இன்னும் அதிகரிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டுள்ளது.

chennai super kings

ஐ.பி.எல். இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கப்போவதை அடுத்து அந்தந்த அணிக்கான பிரத்தேகபாடல்கள் தயாராகி வருகின்றன.இந்நிலையில்சென்னை சூப்பர் கிங்ஸ்சும் தனது பாடல் மற்றும் விளம்பரதயாரிப்பை நேற்று தொடங்கியது. இதில் அனைவரும் உற்சாகமாக பங்குபெற்று வந்தனர். அவர்கள் வெளியிட்டுள்ளஒரு புகைப்படத்தில் கேப்டன் தோனி, துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நாதஸ்வரம் வாசிப்பது போல உள்ளது. மற்றும் வீடியோ ஒன்றில் ஆட்டோவில் இருந்து அனைவரும் வந்து நடனமாடுவதும் உள்ளது. இதுபோல் இன்னும் சில வீடியோக்களும் வெளிவந்துள்ளன.

Advertisment

ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்துடன் மீம், வீடியோ என உருவாக்கி இணையதளத்தை கலக்கி வருகின்றனர். இரண்டு வருடங்களுக்கு பின் களமிறங்கும் சென்னை அணியை எதிர்பார்த்து இப்போதிருந்தே காத்திருக்க ஆரம்பித்துவிட்டனர் ரசிகர்கள்.