ஊசி போட்டால் ஏன் வலி ஏற்படுகிறது? ஊசியைக் கையாளும் முறை உள்ளிட்டவை குறித்த புரிதல் சாமானியருக்குக் குறைவே. அது குறித்த விரிவான விளக்கங்களை டாக்டர் அருணாச்சலம் நமக்கு அளிக்கிறார்.
சிலர் ஊசி போட்டால் அதிக வலி ஏற்படும். சிலர் ஊசி போடும்போது சுத்தமாக வலியே இருக்காது. இதற்குக் காரணம் ஊசி போடும் மருத்துவரின் அனுபவம் தான். ஊசியை எவ்வாறு லாவகமாகப் பயன்படுத்த வேண்டும் என்பது அனுபவமிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியருக்கு நன்கு தெரியும். நாம் போடும் ஊசி எலும்பில் தான் இருக்க வேண்டும், ரத்தக்குழாய்க்கு செல்லக்கூடாது என்பதை உறுதிப்படுத்திவிட்டு ஊசி போட வேண்டும்.
தவறான முறையில் ஊசி செலுத்தப்படும் போது, ரத்தக்குழாய்க்குள் மருந்து செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. சில ஊசிகள் இயல்பிலேயே நிச்சயமாக வலியை ஏற்படுத்தும். அதுபோன்ற ஊசிகள் போடும்போது மருத்துவர்கள் பொதுவாக கவனத்தை திசைதிருப்ப நோயாளியிடம் பேச்சு கொடுப்பார்கள். ஊசி போடும்போது வலி ஏற்படுகிறதா, இல்லையா என்பதற்கு இவ்வளவு காரணங்கள் இருக்கின்றன. குழந்தைகளுக்கு ஊசி போடும்போது இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.
குழந்தை பெறும்போது ஏற்படும் டெட்டனஸ் சிக்கல்களைத் தவிர்க்க தாய்க்கு போடப்படுவது தான் டிடி ஊசி. 'பிதாமகன்' திரைப்படத்தில் சுடுகாட்டில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்க்கு ஏற்படும் நிலையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். டெட்டனஸ் என்பது ஒரு கிருமி. அது வராமல் தடுப்பதற்கு தான் இந்த ஊசி. அடிப்படையில் இது ஒரு தடுப்பூசி.
காயப்பட்ட தோலில் ஓட்டை விழும்போது, காலில் ரத்தம் தேங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே இந்த டிடி ஊசியினாலும் காற்றின் மூலம் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. அதற்காகத்தான் கிருமி வராமல் தடுக்க மருந்துகள் தரப்படுகின்றன. மூன்று நாட்களுக்குள் காயம் ஆறிவிட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை. இல்லையெனில் தொடர்ந்து வலி இருக்கும். படித்தவர்களுக்கும் இது குறித்த புரிதல் இன்னும் தேவை. டிடி ஊசி போடாமல் வளர்ந்த தலைமுறையினர் தாமதிக்காமல் உடனே போட்டுக்கொள்ள வேண்டும். காலம் தாழ்ந்து செய்யப்படும் எந்தச் செயலும் முழுமையான பயன் தராது.