காலநிலை மாற்றத்தால் வரும் உடல் சார்ந்த பிரச்சனைகள், தூக்கம் தொடர்பான கேள்விகளுக்கு நக்கீரன் நலம் யூடியூப் சேனலுக்கு மருத்துவர் அருணாச்சலம் தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக அதிகப்படியான சூடு உடம்பில் ஏற்பட காரணம் என்ன அவற்றை சரி செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று விளக்கம் அளித்திருக்கிறார். அதை பின்வருமாறு பார்ப்போம்...
சில டிரைவர்கள், டெய்லர்கள் எல்லாம் சொல்வார்கள் ‘எங்களுக்கு உட்கார்ந்து வேலை செய்வதால் மூலநோய் வருவதாக சொல்வார்கள்’ அப்படி எல்லாம் எல்லாருக்கும் நடக்காது. அதிகம் தண்ணீர் குடிக்காததால் வருவது சூடு என்பது அப்பட்டமாக எல்லாருக்கும் தெரியும். ஒரு நாளைக்கு தேவையான தண்ணீரை காலை ஏழு மணியில் இருந்து மாலை ஏழு மணிக்குள் ரெண்டு லிட்டர் தண்ணீர் ஆவது குடித்தால் தான் சூடு வராது. இரண்டு விஷயத்தைச் சூடு என்று சொல்லுவார்கள். தோலை சுத்தமாக வைக்காததால் வரும் கட்டியும், புண்ணும். சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் சூடும். இது எல்லாம் உடலில் நீர் இல்லாத அறிகுறிதான்.
திருநெல்வேலி பக்கத்தில் பாணிக்கானு சொல்லுவார்கள். பித்தளை சொம்பு எடுத்து புளியையும் கருப்பட்டியையும் கரைத்து கொடுப்பார்கள். புளிப்பு தண்ணீராக இருக்கும். ஒரு லிட்டர் கொடுப்பார்கள். அடுத்த இருபது நிமிடத்தில் கிட்னி ஹைடிரேட் செய்து பிறப்புறுப்பு வரைக்கும் தண்ணீர் வந்ததும் ஒரு நிவாரணம் கிடைக்கும்.
சூடு என்று சொல்லுபவர்கள், தண்ணீர் குடிக்காததால் வருகிறது என்று மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். காய்கள், பழங்கள் எல்லாம் சாப்பிடாமல், மட்டன் சாப்பிட்டேன், அதனால் மூலம் வந்து விட்டது என்பது தவறான தகவல். கோழி, ஆடு இதனால் சூடு வருவது இல்லை. மட்டன் சாப்பிட்டால் வருகிறது என்றால், அதனுடன் தக்காளி, வெஜிடபிள் சாலட், வெள்ளரி, கேரட், வெங்காயத்துடன் சேர்த்து சாப்பிடாதது தான் காரணம். எனவே அவற்றையெல்லாம் சேர்த்துக் கொண்டால் சூட்டைக் குறைக்கலாம்.
வேடிக்கையாக உள்ள விஷயம் என்னவென்றால், சர்க்கரை வியாதி வரும் வரைக்கும் பழங்களை சாப்பிடுங்கள் என்று சொன்னால் சாப்பிடுவதில்லை. ஆனால் சர்க்கரை வியாதி வந்த பிறகு பழங்களை சாப்பிட வேண்டாம் என்று சொன்னால், நம் பேச்சை கேட்காமல் சாப்பிட்டு விடுகின்றனர். அவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அது அவர்களின் உடலுக்கு நல்லது