இன்றைய அவசர உலகத்தில் பெரும்பாலும் பாஸ்ட் புட் உணவு வகைகளை மக்கள் சாப்பிடுகின்றனர்.அதனால் உடலில் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது .இதனால் இரவு நேரத்தில் தூங்கும் போது நம்மில் ஒரு சிலர் பால் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் அப்படி பால் குடிப்பதால் உடல்நிலை சரியாக இருக்கும் என்று நினைக்கிறார்கள் உண்மையில் பால் சாப்பிடும் போது எந்த மாதிரியான மாற்றங்கள் உடலில் வருகிறது என்று பாக்கலாம் . நம் மக்களிடையே பால் அருந்துவதால் எலும்பு மெலிதல் நோயைத் தடுக்க முடியும் என்று தவறான கருத்து நிலவுகிறது. வயது அதிகரிக்கும்போது, கால்சியம் அளவு குறைகிறது. இதனைத் தடுக்க அதிக அளவில் பால் அருந்துமாறு அறிவுரை வழங்கப்படுகிறது. உண்மையில், அதிக அளவில் பால் அருந்துவதால், எலும்பு மெலியத் தொடங்குகிறது.
மனித ரத்தத்தில் கால்சியம் அளவு 9-10 மில்லிகிராமாக இருக்கும். பால் அருந்தும்போது, ரத்தத்தில் உள்ள கால்சியம் அளவு திடீரென உயரும். தொடக்கத்தில் கால்சியம் அளவு அதிகரித்துள்ளது போன்று தோன்றினாலும், உயரும் கால்சியத்தின் அளவு குறையும். அதாவது, ரத்தத்தில் கால்சியம் அளவு, திடீரென உயரும்போது, அதனை வெளியேற்ற உடல் முயற்சி மேற்கொள்ளும். அதன்படி, சிறுநீரகத்திலிருந்து சிறுநீர் வழியாக கால்சியம் வெளியேறும். உண்மையில், கால்சியம் அளவைப் பெறுவதற்காக பாலை அருந்தும்போது, உடல் அமைப்பின் ஒட்டுமொத்த கால்சியம் அளவும் குறையத் தொடங்கும். அதிக அளவில் பால் உற்பத்தி செய்யப்படும் அமெரிக்கா, ஸ்வீடன், டென்மார்க், ஃபின்லாந்து ஆகிய நாடுகளில் பொதுமக்கள் நாள்தோறும் அதிக அளவில் பால் அருந்துகின்றனர். ஆனால், எலும்பு முறிவு மற்றும் எலும்பு மெலிதல் நோய் தாக்கம் அங்கு தான் அதிகமாக இருக்கின்றன. பாலைப் போன்று செரிப்பதற்கு மிகவும் சிரமமான உணவுப்பொருள் வேறுஎதுவும் இல்லை. பால், திரவத்துக்கு எளிதான மாற்றாக இருப்பதால், பெரும்பாலான மக்கள், தாகமாக இருக்கும்போதெல்லாம், நீரைப் போல பாலை அருந்துகின்றனர். இது தவறானது. பாலில் உள்ள புரோட்டீனில் 80 சதவீதம் அளவுக்கு புரதம் உள்ளது. இது வயிற்றுக்குள் சென்றதும், ஒன்றாக கலந்து செரிமானத்தை சிக்கலாக்குகிறது. மேலும், கடைகளில் விற்கப்படும் பால், கொழுப்பு அளவை சமநிலைப்படுத்துவதற்காக நன்றாக கலக்கப்படுகின்றன. பாலை கலக்கும்போது, அதில், காற்றும் இணைந்துவிடுகிறது. இதனால், பாலில் மற்ற மூலக்கூறுகள் கலந்து கொழுப்பு பொருட்களின் தன்மை அதிகரித்து விடுகிறது. அதாவது, கலக்கப்படும் பால், உடலில் தவறான மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.
மூலக்கூறுகள் கலந்த கொழுப்பு உள்ள பால் 212 டிகிரி பாரன்ஹீட்டில் கொதிக்க வைக்கப்படுகிறது. வெப்பமாக்கும் போது, நொதிகளின் அளவு குறைகிறது. 200 டிகிரி பாரன்ஹீட்டில் கொதிக்க வைக்கும்போது நொதிகள் அழியத் தொடங்குகின்றன. எனவே, கடைகளில் விற்கப்படும் பாலில், முக்கியத்துவம் வாய்ந்த நொதிகள் இல்லாததோடு, கொழுப்பில் மற்ற மூலக்கூறுகள் கலந்துவிடுகிறது. மேலும், அதிக வெப்பநிலையால், புரோட்டீன் களின் அளவு மாறிவிடுகிறது. எனவே, மிகவும் மோசமான உணவாக பால் திகழ்கிறது. இன்று நாம் பயன்படுத்தும் பாலில் அதிக அளவில் ரசாயனக் கலப்பு உள்ளது. மாடு அனைத்து வகையான பயிர்களையும் சாப்பிடுகிறது. அதில், ஏராளமான நச்சுத்தன்மைகள் கலந்துள் ளன. இதிலிருந்து உற்பத்தியாகும் பால், மாடுகளிலிருந்து கறக்கப்படுகின்றன. நீண்ட நாட்கள் பராமரித்து வைப்பதற்காக பாலில் ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே, பெரும்பாலான குழந்தைகளுக்கு, பிறந்ததிலிருந்தே மூச்சுத் திணறல் பிரச்சினைகள், ஆஸ்துமா, உளவியல் உள்ளிட்ட பிரச் சினைகள் ஏற்படுகின்றன. மற்ற மூலக்கூறுகள் கலந்துள்ள கொழுப்பை கொண்டுள்ள பாலை அருந்தும்போது, குடல் பகுதிக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மோசமான பாக்டீரியாக்களை உருவாக்கு கின்றன. இவை, குடல் பகுதியின் பாக்டீரியா அமைப்பை சீர்குலைக் கின்றன. ஹைட்ரஜன் சல்பைடு, அமோனியா உள்ளிட்ட நச்சுக்கள் உருவாகின்றன. பல்வேறு வகையான ஒவ்வாமை நோய்களையும், குழந்தைகளுக்கு நீரிழிவு பிரச்சினையையும் பால் ஏற்படுத்துவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.