வழியெல்லாம் வாழ்வோம் #5
(டாக்டர். டேனியல் ராஜசுந்தரம் P.T)
உங்கள் குழந்தைகள் நலமா - பாகம் 3
சென்ற வாரம் காகிதக்குவளைகள்,நெகிழி பொருட்களால் ஏற்படும் தீமைகள் பற்றி பேசினோம். இந்தக் கட்டுரை, நாம்தொன்மையான, பாரம்பரியமாகப் பயன்படுத்திவந்த பித்தளை, செம்பு போன்ற உலோகங்களால் ஆன பாத்திரங்களின் நன்மையைவிளக்குகிறது.
பித்தளைப் பாத்திரத்தின் நன்மைகள்:
தாமிரம் மற்றும் துத்தநாகம் ஆகியவற்றின் சரியான விகிதத்திலான கலவையே பித்தளையாகும். தனித்தனியே இருக்கும்போது நச்சாக இருக்கும் துத்தநாகமும், தாமிரமும் குறிப்பிட்ட விகிதத்தில் கலக்கையில் மருத்துவத்தன்மை உடையதாக மாறுகின்றன. எனவே, இத்தகைய பித்தளைப் பாத்திரங்களில் சமையல்செய்யும்போது, அது நுண்ணிய அளவில் நம் உடலில் சேர்வதால் கிடைக்கவல்ல நன்மைகள் பல.
பித்தளையில் இருக்கும் துத்தநாகம் நுண்ணுயிரிகளுக்கு எதிராகச்செயல்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கவல்லது. மேலும் 300வகை என்சைம்களின் இயக்கத்துக்கு இது உதவுவதோடு, மனிதனின் வளர்சிதை மாற்றத்துக்கும் துணைபுரிகிறது. பித்தளையில் இருக்கும் தாமிரம் உடல்செயல்பாட்டுக்கும், 13 வகை நொதிகளின் செயல்பாட்டுக்கும் ஊக்கம் தருகிறது. உடலில் இயற்கைவினைகளுக்குத் தூண்டுகோலாக உள்ளது. புரோட்டீன் செயல்பாட்டுக்கும் கைகொடுக்கிறது.’’ என வேதியியல் அறிஞர்கள்கூறுகின்றனர். பித்தளைப் பாத்திரத்தில் வெந்நீர் வைத்துக்குடிக்கும்போது, சரும நோய்களை எதிர்க்கக்கூடிய சக்தி கிடைக்கும். குறிப்பாக, குழந்தைகளுக்கு இது மிகவும் நல்லது.
அதனால்தான் அந்தக்காலத்தில் குழந்தைகளுக்கு செம்பு உலோகத்தாலான விளையாட்டுப் பொருட்களை கொடுத்தனர். நம்முன்னோர். குழந்தைகள் பித்தளைச் செப்பு சாமான்கள் வைத்து விளையாடும்போது அந்த உலோகம் அவர்கள் சருமத்தில் உரசுவதால் அவர்களுக்கு நுண் உயிரித்தாக்குதல் குறைக்கப்பட்டு, நோய் எதிர்ப்புசக்தியும் கிடைக்கும்.
செம்புப் பாத்திரங்கள்:
நம் தமிழ்ப்பண்பாட்டின்படி, தாமிரப்பானை அல்லது துட்டுப்பானை என்பது நம் முன்னோர்களின் வாழ்வியலோடு இணைந்த ஒன்று. வீடுகளில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் பித்தளை குடம் அல்லது அண்டா அல்லது செம்புப்பானைகள் என்று பரிசளிப்பதேபாரம்பரியமாய் இருந்து வந்தது.
தாமிரப்பானையில் இருந்து தண்ணீர் குடிப்பது ஆயுர்வேதத்தின் அடிப்படையாகும். ஆயுர்வேதத்தின்படி, உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான கப்ஹா, பிட்டா மற்றும் வடா போன்றவற்றை சரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் உதவுகிறது. அதனால் தாமிரப்பானையில் இருந்து தண்ணீரை குடித்தால், உங்கள் உடலில் உள்ள இந்த தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும் எனஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.
செம்பின் கீழ்க்கண்ட நன்மைகள் நம் வீட்டுக் குழந்தைகளின்உடலுக்கு எல்லா வகைகளிலும் பயன்படுகின்றன என்பதை புரியவைக்கின்றன.
பாக்டீரியா கொல்லி:
தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை ஒழிக்கும் குணத்தைக்கொண்டுள்ளது தாமிரம். முக்கியமாக வயிற்றுப்போக்கினால்உண்டாகும் ஈ-கோலி போன்ற பாக்டீரியாக்களுக்கு எதிராக இதுசிறப்பாக செயல்படும்.
தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும் காரணி:
தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. பல நேரங்களில், தாமிரக் குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தைராய்டு சார்ந்த பிரச்சனைகள் குழந்தைகளுக்கு சோர்வு, மனஉளைச்சல் போன்ற குறைபாடுகளை ஏற்படுத்துகின்றன.
புண்களை வேகமாக குணப்படுத்தும் காரணி:
புதிய அணுக்களை உருவாக்கி அதனை வேகமாக வளரச் செய்ய தாமிரம் உதவும். இதனால் புண்கள் வேகமாக குணமாகும். இதிலுள்ள வைரஸ் நீக்கி மற்றும் பாக்டீரியா நீக்கி குணங்கள் தொற்றுக்களின்வளர்ச்சியை தடுக்கும்.
மூளை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் காரணி:
மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளை பாதுகாக்க மயலின் உறைகள் அதனை மூடும். இந்த மயலின் உறைகளை உருவாக்க கொழுப்பு வகைப் பொருட்களை தொகுக்க தாமிரம் உதவுகிறது. இதுபோக வலிப்பு வராமலும் அதுதடுக்கும் என வேதியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
செரிமானத்தை மேம்படுத்தும் காரணி:
வயிற்றை மெதுவாக சுருக்கி விரிவாக்க ஊக்குவிக்கும் அறிய குணத்தை தாமிரம் கொண்டுள்ளது. இதனால் செரிமானம் சிறப்பாகும். பரோட்டா போன்றவைகள் குழந்தைகளை வசீகரிக்கும் இந்தக்காலகட்டத்தில், குழந்தைகளின் செரிமானம் சார்ந்த பிரச்சனைகளே நம்மை அடிக்கடி மருத்துவமனைகளுக்கு அலையவிடுகின்றன. எனவே தாமிரம் கலந்துள்ள தண்ணீரை பருகினால் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெற்றிடலாம்.
இரத்தசோகையை எதிர்க்கும் காரணி:
நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்க தாமிரம்உதவுகிறது. இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமானகனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும்.
புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கும் தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால்தான் புற்றுநோய் அணுக்கள் வளரவிடாமல்அது பாதுகாக்கிறது. மேலும், இயக்க உறுப்புகளால் உடலில்ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய இது உதவும்.
எனவே, இனிமேலாவது நம் குழந்தைகளின் நலம் கருதியாவது நம் பாரம்பரிய வழக்கங்களைக் கடைபிடிப்போம். பித்தளை, செம்புபோன்ற உலோகங்களால் ஆன தட்டுகள், குவளைகள், பாத்திரங்கள்ஆகியவற்றை பயன்படுத்துவோம்.
டாக்டர். டேனியல் ராஜசுந்தரம் M.P.T(Ortho), M.A.(Socio)
மயோபதி ஆராய்ச்சி நிலையம்
ஜீவன் அறக்கட்டளை