வெங்காயத்தில் இயற்கையாகவே நிறைய சத்துக்கள் நிரம்பி காணப்படுகின்றன. வெங்காயத்தில் கொழுப்பு சத்து என்பது மிகக் குறைவு. எனவே உடல் எடையை குறைக்கும் எண்ணம் கொண்டவர்கள் வெங்காயத்தை அதிகம் உட்கொண்டால் உடல் எடை குறையும். பச்சை வெங்காயத்தில் உள்ள கந்தக சத்து சிலருக்கு ஒத்து வராது. அப்படி உள்ளவர்கள் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடாமல் வேக வைத்து சாப்பிடலாம். ரத்த விருத்திக்கும், ரத்த சுத்தத்திற்கும் வெங்காயம் மிகவும் உதவியாக இருக்கின்றது. வெங்காயத்தில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருக்கும். குறிப்பாக பச்சை வெங்காயத்தில் அந்த சத்துக்கள் மிக அதிகமாக இருக்கின்றது.
பச்சை வெங்காயத்தை உணவோடு அதிகம் சேர்த்துக்கொள்ளும் போது செரிமான பிரச்சனை இல்லாமல் இருக்கும். பச்சை வெங்காயத்தை பாதியாக நறுக்கி குளவி, தேள் போன்ற நச்சு உயிரினங்கள் கடித்த இடத்தில் தேய்த்தால் வலி குறையும். இரும்பலை குறைக்க பச்சை வெங்காயம் மிகவும் உதவிகரமாக இருக்கும். வெங்காய சாற்றை எடுத்து அதனுடன் மோர் கலந்து சாப்பிட்டால் இரும்பல் குணமாகும். மூளையின் ஆற்றலை வலுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்துக்கு மிக அதிகம். எனவே வெங்காயத்தை சூப்பாக அடித்து சாப்பிட்டால் உடலுக்கு மிக நல்லது. அதனுடன் தேன், கற்கண்டு சேர்த்தும் சாப்பிடலாம்.