Skip to main content

இன்றைய ராசிப்பலன் 14.07.18

Published on 14/07/2018 | Edited on 14/07/2018

கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001


14-07-2018, ஆனி 30, சனிக்கிழமை, துதியை திதி பின்இரவு 12.55 வரை பின்பு வளர்பிறை திரிதியை. பூசம் நட்சத்திரம் மாலை 04.06 வரை பின்பு ஆயில்யம். சித்தயோகம் மாலை 04.06 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சந்திர தரிசனம்.

இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

meshamமேஷம்

இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உத்தியோக ரீதியான பயணங்களால் முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

reshabamரிஷபம்

இன்று காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். உங்கள் பிரச்சனைகள் தீர உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி கிட்டும். திடீர் பணவரவு உண்டாகும்.

 

 

3மிதுனம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க சற்று காலதாமதமாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். பணியாட்களின் ஒத்துழைப்போடு தொழிலில் முன்னேற்றத்தை காணலாம்.

kadagamகடகம்

இன்று வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். செய்யும் வேலைகளை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மனைவி வழியாக நல்லது நடக்கும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.

5சிம்மம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எதிர்பாராத மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று தாமதநிலை ஏற்படும். தொழில் ரீதியான பயணத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

kannirasiகன்னி

இன்று புதிய முயற்சிகள் செய்வதற்கு அனுகூலமான நாளாகும். பிள்ளைகள் தம் பொறுப்பறிந்து செயல்படுவர். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன்பிறந்தவர்களால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

thulamதுலாம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளால் சுப செலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.

viruchagamவிருச்சிகம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். ஆடம்பர பொருள் சேரும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.

danushதனுசு

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள்.  பிறரை நம்பி கொடுத்த பொறுப்புகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலிலும் நிதானம் தேவை. பயணங்களை தவிர்க்கவும்.

magaramமகரம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் எல்லாம் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

 

 

kumbamகும்பம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வீட்டின் சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

meenamமீனம்

இன்று உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அனுகூலமான பலன்கள் கிட்டும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும்.