திருச்சி, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் கைசிக ஏகாதசி திருநாள் அன்று மூலவர் பெருமாள், உற்சவர் ஸ்ரீ நம்பெருமாள், மூலவர் ஸ்ரீ தாயார், உற்சவர் ஸ்ரீரெங்கநாயகி தாயார்க்கு திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து புதிய வஸ்திரங்கள், புதிய குடைகள் கொடுப்பது வழக்கம்.
அதன்படி இவ்வாண்டு கைசிக ஏகாதசியை முன்னிட்டு இன்று (15.11.2021) காலை 7 மணிக்கு திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி ரமேஷ்பாபு, புதிய வஸ்திரங்கள், குடைகள் ஆகியவற்றைக் கொண்டுவந்து கொடுத்தார். இவை அனைத்தும் ஸ்ரீரெங்கவிலாஸ் மண்டபத்திலிருந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க புறப்பட்டு, கருடாழ்வார் மண்டபத்திற்கு எடுத்துவரப்பட்டது. இதனை ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியின்போது, கோயில் உதவி ஆணையர் கு.கந்தசாமி, உள்துறை கண்காணிப்பாளர் மா.வேல்முருகன், உதவி கண்காணிப்பாளர் கிருஷ்ணா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் இருந்தனர்.