பிரேஸிலில் இறந்த பெண்ணின் உடலில் இருந்த கருப்பையை எடுத்து கருப்பை இல்லாத பெண்ணினுள் பொருத்தி குழந்தை பெறவைத்து மருத்துவ உலகமும் அறிவியலும் வளர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுள்ளது.
உலகமையமாதல், காலநிலை மாற்றம், சத்தான உணவு இல்லை என எத்தனையோ காரணங்களால் இன்று பெண்களுக்கு கரு உருவாவதில் பிரச்சனைகள் இருக்கிறது என ஒரு பக்கம் சொல்லிக்கொண்டிருக்க. மறுபுறம் அறிவியல் மற்றும் மருத்துவ உலகம் அதனை எல்லாம் உடைத்து செயற்கையாக கருக்களை உருவாக்கி சாதித்துவருகிறது.
பெண் கருப்பையில் பிரச்சனை என்றால் அதற்கு மாற்றாக வேறொரு பெண்ணின் வயிற்றில் குழந்தை பெறும் வழக்கம் தற்போது நிலவிவருகிறது. இதற்கு அடுத்த கட்டமாக மருத்துவ உலகம் கருப்பை இல்லாத பெண்களுக்கு கருப்பை இருக்கும் வேறு ஒரு பெண் கருப்பையை தானம் செய்தால், அதனை கருப்பை இல்லாத பெண் வயிற்றில் பொருத்தி குழந்தை பெறவைத்தது மருத்துவ உலகம். ஆனால், இன்று மருத்தவ உலகம் அறிவியல் வளர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளது.
’மேயர் ரோக்கிட்டான்ஸ்கி கெஸ்ட் ஹவுசர் சிண்ட்ரோம்’ எனும் குறைபாடு உள்ள பெண்களுக்கு பிறக்கும்போதே கருப்பை இல்லாமல் பிறக்கும் நிலை உள்ளது. இந்தக் குறைபாடு இன்று உலக அளவில் 4,500 பெண்களில் ஒருவருக்கு இருக்கிறது. பிரேஸில் மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்த 42 வயது பெண்ணின் கருப்பையில் இருந்து கருமுட்டைகளை முதலில் அகற்றிவிட்டு. மேயர் ரோக்கிட்டான்ஸ்கி கெஸ்ட் ஹவுசர் சிண்ட்ரோம் குறைபாடுடன் இருந்த 32 வயது பெண்ணுக்கு பொருத்தியுள்ளனர். அதன் பின் ஆறு வாரங்கள் கழித்து அந்தப் பெண்ணுக்கு மாதவிடாய் எனும் இரத்த சுத்திகரிப்பு நிகழ்ந்துள்ளது. அதன் மூலம் அந்தப் பெண்ணுக்குள் பொருத்தப்பட்ட கருப்பையினை அவரின் உடல் ஏற்றுக்கொண்டது என்பதை அறிந்துகொண்டு மேலும் அவரின் கருப்பைக்குள் அவரின் கனவரின் விந்து அணுக்கள் செலுத்தப்பட்டு கருமுட்டை பாதுகாக்கப்பட்டுவந்துள்ளது. ஏழு மாதங்கள் கழித்து பாதுகாக்கப்பட்ட கருமுட்டையில் இருந்து குழந்தை உருவாகிவருவதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இறுதியாக அந்தப் பெண்ணுக்கு டிசம்பர் மாதம் 15, 2017-ம் ஆண்டு 2.5 கி.கீ எடையுடன் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதற்குமுன் இதுபோல் இறந்தவரின் கருப்பையைக்கொண்டு வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பெண்களுக்கு பத்து முறை முயற்சித்தும் தோல்வியில் மட்டுமே முடிந்துள்ளது. மேலும் இதுவே முதல் முறையாக இறந்தவரின் கருப்பையைக்கொண்டு உயிருடன் இருக்கும் நபருக்கு பொருத்தி நல்ல ஆரோக்கியமானக் குழந்தை பிறந்துள்ளது. இதன் மூலம் மருத்துவ உலகமும், அறிவியல் உலகமும் வளர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளது. ஆனால் இதுவே மருத்துவம் மற்றும் அறிவியல் துறைகளின் வளர்ச்சியின் முற்றுப்புள்ளி எனவும் நம்மால் கருதமுடியாது.