Skip to main content

பாகிஸ்தானில் இந்திய ஊழியர்கள் இருவர் மாயம்... பாகிஸ்தானின் பழிக்குப் பழி நடவடிக்கையா...?

Published on 15/06/2020 | Edited on 15/06/2020

 

Two Indian High Commission officials in Pakistan missing

 

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றி வந்த இரு இந்திய ஊழியர்கள் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


அண்மையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய இரு பாகிஸ்தானியர்கள் இந்தியாவின் பாதுகாப்புப் படிகள் குறித்த தகவல்களை வாங்க முயன்றதாகக் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் இருவரையும் விசாரித்தபோது, தங்கள் இருவரும் இந்தியர்கள் எனக்கூறி அவர்கள் ஆதார் அட்டையைக் காண்பித்துள்ளார். ஆனால் விசாரணையில், அது போலி ஆதார் அட்டை எனத் தெரியவந்துள்ளது. பின்னர் பாகிஸ்தான் அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களை இருவரையும் இந்திய அரசு விடுவித்து, 24 மணிநேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று காலை பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றி வந்த இரு இந்திய ஊழியர்கள் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்லாமாபாத்தில் பணியிலிருந்த  இந்த இரண்டு இந்திய ஊழியர்களும் திங்கள்கிழமை காலை சில வேலைகளுக்கு வெளியே சென்றுள்ளனர்.  ஆனால் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்வதற்கு முன்னரே மாயமாகி உள்ளனர். மேலும், அவர்கள் பாகிஸ்தானின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிடியில் அவர்கள் சிக்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்தியாவின் நடவடிக்கைக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக அவர்களை உளவாளிகளாகச் சித்தரிக்க இதுபோன்று செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்