
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 54,97,416 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனா பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,46,668 ஆக அதிகரித்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 23,01,898 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 16,86,436 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் ரஷ்யாவில் 3,44,481, ஸ்பெயினில் 2,82,852, பிரிட்டனில் 2,59,559, பிரேசிலில் 3,63,618, இத்தாலியில் 2,29,858, பிரான்சில் 1,82,584, ஜெர்மனியில் 1,80,328, துருக்கியில் 1,56,827, ஈரானில் 1,35,701, சீனாவில் 82,974 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அமெரிக்காவில் கரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 99,300 ஆக அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் 3,541, ஸ்பெயினில் 28,752, பிரிட்டனில் 36,793, பிரேசிலில் 22,716, இத்தாலியில் 32,785, பிரான்சில் 28,367, ஜெர்மனியில் 8,371, துருக்கியில் 4,340, ஈரானில் 7,417, சீனாவில் 4,634 பேர் கரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை உயிரிழந்துள்ளனர்.