Published on 14/11/2022 | Edited on 14/11/2022

மக்களால் புறக்கணிக்கப்பட்ட கிராமம் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. அக்கிராமத்தின் விலை 5,90,000 டாலராம். அதாவது இந்திய மதிப்பில் 4 கோடி ரூபாயாம்.
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் இருந்து சுமார் மூன்று மணி நேர பயண தூரத்திற்கு அப்பால் இருக்கும் மாநிலம் ஸமாரோ. அங்குள்ள சால்டோ டி காஸ்ட்ரோ கிராமம்தான் தற்பொழுது விற்பனைக்கு வந்துள்ளது. அந்த கிராமத்தில் 44 வீடுகள், தங்கும் விடுதிகள், பள்ளிக்கூடம், நீச்சல் குளம், காவலர் முகாம் என அனைத்தும் இருந்தும் தங்குவதற்கு மக்கள் இல்லை என்பதால் அதனை விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த கிராமத்தை ஒருவர் வாங்கி அதனை சுற்றுலாத்தலமாக மாற்ற முயன்று தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.